தீபாவளிக்காக சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தாண்டுதீபாவளி பண்டிகையொட்டி சென்னையிலிருந்து இன்று முதல் 13 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த 3 நாள்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்ந்து, மொத்தம் 9 ஆயிரத்து 510 பேருந்துகளும் சென்னையிலிருந்து புறப்படும்.
பிற நகரங்களிலிருந்து 5247 சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்குகிறது. சென்னையிலிருந்து கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூவிருந்தமல்லி மற்றும் கே.கே.நகர் என 5 மையங்களிலிருந்து பேருந்துகள் புறப்படும் . 13 சிறப்பு கவுன்டர்களும் , உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன .
பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை , முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் அவசியம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்ப , 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையில் மொத்தம் 16 ஆயிரத்து 26 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பேருந்துகள் இயக்கம் பற்றி விவரங்களை அறியவும் , புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
