உணவுப் பிரியர்களை ஈர்த்த 24 காரட் தங்க ‘பர்கர்’

அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ள 24 காரட் தங்கத்திலான ‘பர்கர்’, உணவுப் பிரியர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

துரித உணவுகளின் பட்டியலில் பீட்சாவை அடுத்து மிகவும் பிரபலமான உணவுப்பொருளாக இருப்பது பர்கர். காய்கறிகளைக் கொண்டும், பல வகையான இறைச்சிகளையும் கொண்டும் தயாரிக்கப்படும் இந்த பர்கருக்கு அனைத்து நாடுகளிலும் மவுசு உள்ளது.

இந்நிலையில், கொலம்பியா தலைநகர் பொகாட்டாவில் உள்ள பிரபல உணவகம் ஒன்று, 24 காரட் தங்கத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பர்கரை அறிமுகப்படுத்தி உள்ளது. வழக்கமான இறைச்சி பர்கரின் மேற்பகுதியில் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டிருப்பதே இதன் தனிச்சிறப்பு ஆகும்.

அந்த உணவகம் சார்பில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட அந்த பர்கரின் வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. இந்த பர்கரின் விலை 57 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.4,191 ஆகும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x