“கொரோனா தடுப்பூசி ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்கச் செய்வதற்கான விநியோகத் திட்டங்கள் தேவை” ராகுல்காந்தி ட்வீட்!!
“கொரோனா தடுப்பூசியை அனைத்து இந்தியர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் விநியோகிக்க சரியான திட்டம் தேவை” என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மருந்து நிறுவனமான ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 90% கொரோனா பாதிப்பிலிருந்து மீள உதவுவதாக செவ்வாய்க்கிழமை செய்திகள் வெளியாகின.கொரோனா தொற்று மத்தியில் மிக முக்கியமான அறிவிப்பாக இது பார்க்கப்பட்டது.
Even though Pfizer has created a promising vaccine, the logistics for making it available to every Indian need to be worked out.
GOI has to define a vaccine distribution strategy and how it will reach every Indian. pic.twitter.com/x5GX2vECnN
— Rahul Gandhi (@RahulGandhi) November 11, 2020
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, “ஒரு நம்பிக்கைக்குரிய தடுப்பூசியை உருவாக்கியிருந்தாலும், அதை ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்கச் செய்வதற்கான விநியோகத் திட்டங்கள் வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும் “கொரோனா தடுப்பூசி ஒவ்வொரு இந்தியரையும் எவ்வாறு அடைய வேண்டும் என்பதை அரசு வரையறுக்க வேண்டும்” என அவர் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.