இந்தியாவில், பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளியவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவில் பாம்புக்கடியால் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“உலகளவில் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் வரை பாம்பு கடியால் இறக்கிறார்கள். இதில் பாதியளவு இந்தியாவில்தான் நடக்கிறது. உலகிலேயே இந்தியாவில்தான் உயிரிழப்புகள் அதிகம்.
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 2.5 லட்சம் பேர் பாம்புக்கடிக்கு ஆளாகின்றனர். அதில், 50 ஆயிரம் பேர் இந்தியாவில் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில், 12 லட்சம் பேர் பாம்பு கடித்து இறந்துள்ளனர்.
குறிப்பாக மழைக்காலத்தில்தான் பாம்புக்கடி இறப்புகள் அதிகம். தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த இறப்புகளை தவிர்க்க முடியும். ஆனால், போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் போதிய விஷமுறிவு மருந்துகள் ஏழைகளுக்கு கிடைப்பதில்லை. இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க புதுமையான அணுகுமுறை வேண்டும். ” என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.