தூக்கப்பட்ட பணமதிப்பிழப்பு பாடத்திட்டம்… சந்தடி சாக்கில் விளையாடிய மத்திய அரசு!

குடியுரிமை, பண மதிப்பிழப்பு, மதச்சார்பின்மை ஆகியவை தொடர்பான பாடங்கள், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
‘வரும், 31 வரை, பள்ளி, கல்லுாரிகளை திறக்க வேண்டாம்’ என, மத்திய மனிதவள அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. பாதிக்காலம் ஊரடங்கில் கழிந்து விட்டதால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த குறைக்கப்பட்ட பாடங்களில், ஜனநாயகம், ஜனநாயகத்தை காக்க நடத்தப்பட்ட போராட்டங்கள், குடியுரிமை, மதச்சார்பின்மை, மாநில அரசு களின் வளர்ச்சி மற்றும் கூட்டாட்சி தொடர்பான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், சீனா, மியான்மர், வங்கதேசம், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான நல்லுறவுகள், இந்திய பொருளாதார மேம்பாடு, சமூக போராட்டங்கள், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட விபரீதம் போன்ற பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு எந்த துறைகளில் எல்லாம் தோல்வியுற்றதோ, அவற்றை சந்தர்ப்பம் பார்த்து நீக்கியுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்மா பானர்ஜி உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.