டிக்டாக்கை வாங்க முயற்சி செய்யும் டிவிட்டர் ! – மைக்ரோசாஃப்ட்டும் போட்டா போட்டி!

டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் டிவிட்டர் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டிக்டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்தது. இதையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசும் அதே முடிவை எடுக்கும் விதமாக, செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்ய வேண்டும் என்றும், இல்லையேல் டிக்டாக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இப்போது அமெரிக்க செயலியான டிவிட்டர் நிறுவனம் டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதே முயற்சியில் மைக்ரோ சாப்ட் நிறுவனமும் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது.