நிதிஷ் குமார் மீண்டும் பிகார் முதலமைச்சராக பதவியேற்க மாட்டார்..

பிகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்க மாட்டார் என லோக் ஜன்சக்தியின் தலைவர் சிராங் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலத்தின் பேரவைத் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. 3 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் 2ஆம் கட்டமாக செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் லோக்ஜன்சக்தி கட்சியின் தலைவரான சிராக் பாஸ்வான் ககரியா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிதிஷ் குமார் பிகாரின் முதல்வராகப் போவதில்லை. மக்கள் அவரை நிராகரித்திருக்கிறார்கள்” என்றார்.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள லோக் ஜன்சக்தி கட்சி பிகார் பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு எதிராக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x