காங்கிரஸ் எம்.பி. அகமது படேல் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!!

காங்கிரஸ் எம்.பி. அகமது படேல் குருகிராமிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அகமது படேலுக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலை குறித்து மகன் பைசல் படேல் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“அகமது படேலுக்கு சில வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மேற்கொண்டு சிகிச்சைக்காக அவர் குர்கானிலுள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.”