பீகார் தேர்தல் – முதல் கட்ட 71 தொகுதிகளில் வெல்லப்போவது யார்?

பீகாரில் முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணிக்கும் , பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
நடந்து முடிந்த 71 தொகுதிகளில், ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெறுமென்றும் , பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பிருக்கிறதெனவும் பீகார் தேர்தல் களத்திலிருந்து வரும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மீதமுள்ள 22 தொகுதிகளில் மிக கடுமையான போட்டி நிலவுகிறது. சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி பிரிக்கும் ஓட்டுக்களை பொறுத்து, 10 முதல் 14 தொகுதிகள் வரை கூடுதலாக ஆர்ஜேடி அணி வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. சுயேட்சைகள் 3 தொகுதிகளிலும், எல்ஜேபி கட்சி ஒரு தொகுதியையும் கைப்பற்ற வாய்ப்புண்டு.
முதல் கட்ட தேர்தலில் ஏறக்குறைய 40 – 44 தொகுதிகளை ஆர்ஜேடி அணி வெல்லும் நிலை ஏற்பட்டிருப்பதால், பீகாரின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது.