“தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும்” மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

“தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்றுக்கொள்ளும்” என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் 227 இடங்கள் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டது. இது போக மற்ற இடங்களில் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்த எப்படியும் சிரமப்பட தான் போகிறோம் என்று மாணவர்களும், பெற்றோர்களும் தெரிவித்தார்கள்.
இந்த நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்றுக்கொள்ளும் என்ற முக்கியமான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் கட்டணம் கண்டு பரிதவிக்கிறார்கள். அவர்களின் மருத்துவக் கனவு அணையாது!
இந்தக் கல்வியாண்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாணவர் நலன் காக்கும் திமுக ஏற்கும்!#DMK4TN pic.twitter.com/shJwbZBg2w
— M.K.Stalin (@mkstalin) November 21, 2020
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கட்டணத்திற்கு அரசின் உதவி எதிர்பார்த்த நிலையில் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும். மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது திமுக.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமையும் திமுக ஆட்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமைதி திமுக ஆட்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.ஏழை மாணவர்களின் துயரை துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை என்பதை நினைவூட்டுகிறோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.