“மதம் கடந்து திருமணம் செய்து கொண்ட பாஜக தலைவர்கள் லவ் ஜிகாத் வளையத்திற்குள் வருவார்களா?” முதல்வர் கேட்ட அதிரடி கேள்வி!!

“மதம் கடந்து திருமணம் செய்து கொண்ட பாஜக தலைவர்கள் லவ் ஜிகாத் வளையத்திற்குள் வருவார்களா?” என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்கள் லவ் ஜிகாத் பெயரில் மதமாற்றத்தை மேற்கொள்ள திருமணங்கள் நடைபெறுவதாகக் கூறி அதற்கு எதிராக சட்டம் இயற்ற போவதாக அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் லவ் ஜிகாத் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பாஜகவின் பல தலைவர்கள் மதம் கடந்து திருமணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் லவ் ஜிகாத்துக்கள் அடங்குவார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட், “‘லவ் ஜிகாத்’ என்ற சொல் பாஜகவினால் தயாரிக்கப்பட்டு தேசத்தை பிளவுபடுத்துவதற்கும், வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது” என குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x