அரக்கோணம் அருகே எம்.பி.பி.எஸ் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை!!

அரக்கோணம் அருகே மருத்துவக்கல்லூரி மாணவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

அரக்கோணத்தை அடுத்த சித்தேரியை சேர்ந்தவர் புருஷோத்தமன்(51). தமிழக காவல்துறையில் லஞ்சஊழல் தடுப்புப்பிரிவில் ஆலந்தூரில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது இளையமகன் யுகசிற்பி(20). ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் இரண்டாமாண்டு எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். தற்போது கரோனா பொது முடக்ககாலம் என்பதால் கல்லூரி திறக்கப்படாத நிலையில் வீட்டில் இருந்த படி ஆன்லைனில் படித்து வந்தார். 

இந்நிலையில், புதன்கிழமை இரவு வீட்டில் தனது அறையின் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்ட யுகசிற்பி, மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 

வியாழக்கிழமை விடியற்காலை இவ்விவரம் வீட்டில் உள்ளோருக்கு தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். யுகசிற்பியின் சகோதரர் சிபிசக்கரவர்த்தி, உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வருகிறார். 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x