புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த திருமண பெண்… டமார் என வெடித்தவுடன் அலறி ஓடும் காட்சிகள்…
சமீபத்தில், லெபனானின் பெய்ரூட் நகரில் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் சேமிப்புக் கிடங்கிலிருந்து வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் வெடி விபத்தின் போது திருமணமான ஜோடிகள் அவர்களது திருமண வீடியோவை பதிவு செய்து கொண்டு இருந்துள்ளனர். மணப்பெண் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே , இந்த விபத்து ஏற்பட்டதால் மணப்பெண் மணமகன் கேமராமேன் அனைவருமே அலறி ஓடும் காட்சிகள் அவர்களது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.