பொலிவியா அதிபர் ஜீனைன் ஏயெஸ்க்கு கொரோனா

தென் அமெரிக்க நாடான பொலிவியா நாட்டின் இடைக்கால அதிபராக உள்ளவர் ஜீனைன் ஏயெஸ் என்ற பெண். இவர், நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் உரையாற்றினார். அப்போது தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், டாக்டர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக அந்நாட்டு சுகாதரத்துறை அமைச்சர் மற்றும் ஒரு அமைச்சர் என இரு அமைச்சர்களுக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்புக்காக, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொலிவியா நாட்டில் இதுவரை 42 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நோய் தடுப்பு நடவடிக்கைகள் அங்கு நடந்து வந்தாலும், பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது