“முழு கொள்ளளவான 24 அடியை நெருங்கி உள்ள செம்பரம்பாக்கம் ஏரி மதியம் 12 மணிக்கு திறக்கப்படும்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகரில் பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது. முழு கொள்ளளவு 24 அடி கொண்ட சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக தற்போது அதிகரித்துள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவை எட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிகான நீர் வரத்தும் கணிசமாக அதிகரித்து வருவைத்தால், மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுகிறது. வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படும். பின்னர் தேவைக்கேற்ப அதிக அளவு நீர் திறக்கப்படும். செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டால், சென்னைக்குள் பாயும் அடையாறு ஆற்றில் வெள்ளம் வர வாய்ப்புள்ளது. எனவே அடையாறு ஆற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
