பிரேசில் அதிபர் சொன்ன கொரோனா மருந்து என்ன தெரியுமா? கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனக்கு, ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை நன்றாக வேலை செய்கிறது என்று பிரேசில் அதிபர் தெரிவித்துள்ளார்.

“கொரோனாவை கண்டு அஞ்ச வேண்டாம்; சமூக விலகல், முகக்கவசம் அணிவது அவசியமில்லை; சுதந்திரமாக நடமாடுவதே சிறந்தது” என்று பிரசாரம் செய்து வந்தவர் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ. இவருக்கும் தற்போது லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கூட்டங்களில் பங்கேற்காமல், அலுவலக பணிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மேற்கொள்கிறார்.

இந்நிலையில், பிரேசில் அதிபர் பேஸ்புக் நேரலையில் உரையாற்றினார். அப்போது, அவர் நல்ல நிலையில் வழக்கமான உற்சாகத்துடன் காணப்பட்டார்.

நேரலையில் பேசிய அதிபர், தனக்கு கடந்த வார இறுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டதில் இருந்தே, தினமும் ஒரு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை சாப்பிடுவதாக தெரிவித்தார்.

‘ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை நன்றாக வேலை செய்கிறது. தற்போது நலமுடன் இருக்கிறேன். கடவுளுக்கு நன்றி. இந்த மருந்தை விமர்சிப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு மாற்று மருந்தை வழங்கட்டும்’ என்றும் அதிபர் தெரிவித்தார்.

மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின், பல்வேறு நாடுகளில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாதான் இந்த மருந்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு. ஆனால், தடுப்பூசி கம்பெனிகள், இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை எதிர்த்து வருகின்றன. அதற்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 17.59 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x