கேரளத்தில் புதிதாக 5,378 பேருக்கு கரோனா தொற்று உறுதி!!

கேரளத்தில் புதிதாக 5,378 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தல் 55,996 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், புதிதாக 5,378 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதை நிலவரப்படி 64,486 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 27 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2,148ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 5,16,978 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும், 3,17,195 பேர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் உள்ளனர். அதில் மருத்துவமனைகளில் 16,270 பேர் உள்ளனர்.
மொத்தம் 545 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.