‘ அன்லாக் 4’ – தளர்வுகள் என்னென்ன? எதற்கெல்லாம் அனுமதி?

நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏழாம் கட்ட ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அனைத்து மாநில செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கு அமல் படுத்தக் கூடாது .
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிக்கக் கூடாது.
மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முழுமையான அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்திற்குள்ளோ அல்லது மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் தேவையில்லை.
செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்.
செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி கலையரங்கம், திறந்தவெளி திரையரங்குகள் செயல்படலாம்.
வெளிநாட்டு விமான சேவைக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.