மூணாறில் ஸ்வப்னா பதுங்கலா ? போலீஸ் கண்காணிப்பு

கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்வப்னா, மூணாறுக்கு தப்பி வந்ததாக தகவல் கிடைத்துள்ளதால், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. அரபு எமிரேட்ஸ் தூதரக அலுவலக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னாவுக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஸ்வப்னா தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், ஸ்வப்னா மூணாறுக்கு காரில் தப்பி வந்ததாக தகவல் கிடைத்தது. இதனால் மூணாறு அருகே போதமேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளை போலீசார் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.