டிக்டாக் தலைமையகம் மாறுகிறதா?

தடை செய்யப்பட்ட சீன செயலியான டிக்டோக் தனது தலைமையிடத்தை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது.

சீனாவை தலைமையிடமாக கொண்ட செயலி டிக்டாக். இதன் செயலிக்கு இந்தியாவில்தான் அதிக பயனர்கள் இருந்தனர்.இந்தியாவுக்கும் சீனாவுக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்தியாவில் முடக்கப்பட்டன. அதிபர் டிரம்ப்பும் டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளார்.

இதனிடையே தன் தலைமையகத்தை சீனாவில் இருந்து வேறு ஒரு நகரத்திற்கு மாற்றுவது மற்றும் புதிய நிர்வாக குழுவை உருவாக்குவது குறித்து டிக்டாக் பரிசீலித்து வருகிறது. டிக் டாக் நிறுவனம் ஏற்கனவே லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், லண்டன்,டப்ளின், சிங்கப்பூர் ஆகிய ஐந்து நகரங்களில் அலுவலகங்களை கொண்டுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்காவின் தடை உத்தரவு நடவடிக்கை காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் வருவாய் தற்போது குறைந்துள்ளதால் தனது தலைமையகத்தை மாற்றும் முடிவில் உள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x