வைட்டமின் டி சத்தை இலவசமாக கொடுக்கும் “சூரிய ஒளி”

`சூரிய ஒளி உடலில் பட்டால் வைட்டமின் டி சத்து கிடைக்கும். அதனால் தசைகள் வலிமை பெறும், எலும்புகள் உறுதியாகும்’ என்கிறார்கள். ஆனால், வெயில் பிரதேசத்தில் வசிக்கும் நம்மில் பலருக்கு ‘வைட்டமின் டி’ குறைபாடு இருப்பது ஏன்?

பெரும்பாலானோர் குளிரூட்டப்பட்ட அறைகளிலேயே வசிக்கிறோம். பகலில் ஏ.சி அறையில் வேலை, இரவில் தூங்கும்போது ஏ.சி என எல்லா நேரமும் குளிர்ச்சியான சூழலில் இருக்கிறோம். இதனால் உடலின் உள்ளே வெப்பம் அதிகரித்து ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. கார், பஸ், ரயில் பயணங்களும்கூட நிழல் தரக்கூடியவையாகவும், குளிரூட்டப்பட்டவையாகவும் இருப்பதால் நம் உடலில் வெயிலே படுவதில்லை. வீட்டை விட்டு வெளியே வரும்போது தலை முதல் பாதம் வரை மூடிக்கொண்டு செல்வதால், சூரிய ஒளி உடலில் விழுவதில்லை.

இதனால் ‘வைட்டமின் டி’ குறைபாடு உண்டாகிறது. இந்தக் குறைபாட்டைப் போக்க வேறு மருந்துகளோ, உணவுமுறைகளோ பெரிய அளவில் பயன் தராது. வெயில்படும்படி இருந்தாலே போதுமான அளவு ‘வைட்டமின் டி’ கிடைக்கும்.
வெயிலை விரோதிபோல் நினைத்து அதைத் தவிர்ப்பது பெரும் ஆபத்து என்பது பலருக்குத் தெரிவதில்லை. வெயில் நமக்கு நண்பன். தினமும் அரை மணி நேரம் வெயிலில் நடப்பதால், உடற்பயிற்சி செய்வதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அரை மணி நேரம் என்பது எந்த அரை மணி நேரம் என்ற கேள்வி எழும். 

முற்பகல் 11 மணிக்கு மேல் 2 மணி வரையிலான வெயிலைத் தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் சூரிய ஒளியில் அல்ட்ரா வயலட் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். அவை, நமது சருமத்தின் நிறத்தை மாற்றிவிடுவதுடன் வேறு சில உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் வெளியே சென்றால் நீரிழப்பு ஏற்பட்டு மயக்கம் வரும். அதுபோன்ற சூழலில் போதுமான அளவு நீர் அருந்தவேண்டியது அவசியம். உச்சி வெயிலில் நிற்பதைத் தவிர்த்து காலை 8 மணிக்குள் அல்லது மாலை 5 மணிக்கு மேல் தாராளமாக வெயிலில் நின்று உரையாடலாம் அல்லது உடற்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றைச் செய்யலாம்.

அத்துடன் ஒவ்வொரு நாளைத் தொடங்கும்போதும், அன்றைய தினம் முடிவடையும்போதும் வெயிலோடு இருப்பது நல்லது. வெயில் நமது சருமத்தில் நேரடியாக, வெளிப்படையாக விழவேண்டும். கை, கால் மற்றும் சருமப் பகுதிகள் வெயிலில் படுவதால், உடல் வைட்டமின் டியை உட்கிரகித்துக் கொள்ளும். 

இந்தக் குறைபாட்டைப் போக்க வெயிலில் நேரடியாக நிற்காமல் மண் குளியல், வாழை இலைக் குளியல் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் போதுமான அளவு இந்தச் சத்து கிடைக்கும். மண் குளியல் செய்வதால், மண்ணிலுள்ள சத்துகள் சருமத்தின் வழியாக உடலுக்குள் சென்று வெப்பநிலையைச் சீராக வைக்க உதவும். மேலும், சருமம் ஒரு மிகப்பெரிய கழிவு நீக்க உறுப்பாக இருப்பதால், மண்ணை உடலில் பூசி வெயிலில் நிற்கும்போது சருமத்தின் வழியாகக் கழிவுகள் வெளியேறும்.

மேலும், தேவையில்லாதவற்றை வெளியே தள்ளி தேவையான சத்துகளை எடுத்துக்கொள்வதில் சருமத்தைப் போன்ற சிறந்த உறுப்பு வேறு எதுவும் இல்லை. வாழை இலைக் குளியல் எடுத்துக் கொள்வதால் உடலுக்குத் தேவையான பச்சையம் கிடைக்கிறது. இந்தச் சத்தும் உடலில் சேரும். மண் குளியல் மற்றும் வாழை இலைக் குளியலை நண்பகல் நேரத்தில் எடுத்துக்கொள்வது முழுமையான நன்மையைத் தரும்.

வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கிரீம்களை உடலில் பூசிக்கொள்வார்கள். அதனால் எந்தவிதப் பலனும் இல்லை. கிரீம்களைப் பூசிக்கொள்வதால் சருமத்தின் துவாரங்கள் மூடிக்கொள்ளும். அதேநேரம், சருமத்தில் ஏதாவது ஒரு எண்ணெயை உடலில் பூசிக்கொள்ளலாம். அது வைட்டமின் டி சத்தை  உட்கிரகித்துக்கொள்ள உதவும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x