அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் எப்போது துவங்கும்? புதிய தகவல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம், ஆகஸ்டில் துவங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஸ்ரீ ராம்ஜன்மபூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறியதாவது,

‘பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவர், தேதியை இறுதி செய்த உடன், அந்த தேதியில் கட்டுமானம் துவங்கப்படும். கோயில் கட்டுமான பணிகள் துவங்கும் சந்தர்ப்பத்தில் ஆர்.எஸ்.எஸ். சங்கத் தலைவர் மோகன் பகவத்தும் கலந்து கொள்வார்.

கோவில் கட்டுமான விழா பல மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களுடன் கொண்டாடப்படவிருந்தது. இந்நிலையில், கொரோனா பரவலுக்குப் பிறகு, பங்கேற்பாளர்களின் பட்டியலில் பிரதமர் மோடி, மோகன் பகவத், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், சில அமைச்சர்கள் மட்டுமே இருக்கக்கூடும். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

கோயில் கட்டுமானத்தைத் தொடங்க கர்பி கிரிஹாவில் பூமி பூஜை செய்யப்படும். இது கோயில் கட்டுமானத்தின் முறையான தொடக்கமாகும். அதற்காக அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன” என்று அந்த அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x