2 லட்சம் சம்பளத்தில் கோடீஸ்வர வாழ்க்கை?? வனத்துறை அதிகாரியை தூக்கிசென்ற லஞ்ச ஒழிப்புத்துறை!!

ஒடிசா வனத்துறை அதிகாரி அபய் காந்த் பதாக் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
1987 ஆம் ஆண்டு பேட்ச்சில் ஐ.எப்.எஸ் அதிகாரியாக வாழ்க்கை தொடங்கிய அபய் காந்த் பதாக், தற்போது ஒடிசாவின் காடுவளர்ப்பு, பிசிசிஎப் திட்டத்தின் கூடுதல் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் அவரது சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது.
இதில் 20 முறை தனிவிமானத்தில் குடும்பத்துடன் பயணம், உயர்ரக கார்கள், கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகள் என ஆடம்பரமான வாழ்க்கையை மாதம் 2.7 லட்ச ரூபாய் சம்பளம் பெறும் வனத்துறை அதிகாரியால் எப்படி இவ்வளவு பணம் பெற முடிகிறது.புவனேஷ்வரில் 8,000 சதுர அடி வீடும், இத்தாலி மார்பிள்ஸ், 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பெட் கொண்ட வீட்டை எப்படி வைத்திருக்க முடிகிறது!
சோதனையின்போது, அவருடைய அண்ணன் மகளிடமிருந்து 50 லட்ச ரூபாயும், அவருடைய ஓட்டுநரிடமிருந்து 20 லட்ச ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அரைகிலோ தங்கம் மற்றும் 10 லட்ச ரூபாய் பணமும் அவருடைய வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது. அபய் காந்தின் மகனின் வங்கிக் கணக்கில் 9.4 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. புபனேஷ்வரில் இருக்கும் ஒரே ஒரு வங்கிக் கணக்கில் மட்டும் 8.4 கோடி ரூபாய் உள்ளது.
மெர்சடிஸ், பி.எம்.டபிள்யூ, டாடா ஹாரியெர் ஆகிய விலை உயர்ந்த கார்கள் அவருடைய மகனின் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளன’.
விசாரணையில், அபய் பதாக் கூறியதாவது: தனது மகன் ஆகாஷ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரது சம்பளமாக மாதத்திற்கு ரூ.1 கோடி வரை கிடைக்கிறது என்றார். இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பதாக் மகன் ஆகாஷை மும்பையிலிருந்து புவனேஷ்வருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.