‘CUB EASY APP’ வீட்டிலிருந்தபடியே கணக்கு தொடங்கலாம்: சிட்டி யூனியன் வங்கியில் புதிய வசதி

வீட்டிலிருந்தபடியே சிட்டி யூனியன் வங்கியில் கணக்குத் தொடங்குவதற்கு ஏதுவாக, காணொலி வாயிலாக வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிந்து கொள்ளும் வசதியை (கே.ஒய்.சி) வங்கி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

காணொலி வாயிலாக வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு அனுமதியளித்த ரிசர்வ் வங்கி, இதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இதன்படி, கணக்குத் தொடங்கும் வாடிக்கையாளர்களின் விவரங்களை காணொலி வாயிலாக அறிந்து கொள்வதற்கான வசதியை, சிட்டி யூனியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது. வங்கியில் கணக்குத் தொடங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், CUB EASY APP எனப்படும் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதில், பான் அல்லது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, உடனடியாக கணக்குத் தொடங்கிக் கொள்ளலாம்.

வாடிக்கையாளர்களுக்கு வசதியான நேரத்தில், கே.ஒய்.சி.க்கான தகவல்களை அவர்களிடம் வங்கி அதிகாரிகள் கேட்டுப் பெறுவர்.

இதையடுத்து, வங்கிக் கணக்கு நடைமுறைக்கு வந்து விடும். இதன் மூலம் வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்லாமல், அனைவராலும் எளிதில் கணக்குத் தொடங்க முடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x