வைரக்கற்கள் பதித்த மாஸ்க் – கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவரா போறீங்க மக்கா

சூரத்தில் வைரக்கல் பதித்த முகக்கவசங்களை நகைக்கடை ஒன்று விற்பனை செய்து வருகிறது. நான்கு விதமான டிசைன்களில் இந்த மாஸ்க்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரசுக்கு முகக்கவசமும், 2 மீட்டர் தனிநபர் இடைவெளியும் தான் தற்போதைக்கு தடுப்பு மருந்தாக உள்ளது. ஆனால் அந்த முகக்கவசம் இந்திய மக்களின் கிரியேடிவ் எண்ணத்தில் சிக்கி சின்னமின்னமாகிக் கொண்டிருக்கிறது. லெக்கின்ஸிற்கு மேட்ச்சான மாஸ்க், புடவைக்கு மேட்ச்சான மாஸ்க் என விற்பனைக்கு விடுகின்றனர். இதனை எல்லாம் கண்டால் கொரோனாவே ஆத்திரமடைந்து இன்னும் வீரியம் எடுக்க வாய்ப்பிருக்கிறது.

சில நாட்களுக்கு முன் ஒரு விளம்பர பேர்வழி தங்கத்தில் மாஸ்க் அணிந்து போஸ் கொடுத்தார். தற்போது சூரத்தைச் சேர்ந்த நகைக் கடை ஒன்று வைரக்கற்கள் பதித்த மாஸ்க்கை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சில நாட்களுக்கு முன் அக்கடைக்கு வந்த ஒருவர் தன் வீட்டுத் திருமணத்துக்கு மணமகன், மணமகளுக்கு வைரம் பதித்த மாஸ்கை பரிசாக அளிப்பதற்காக ஆர்டர் கொடுத்துள்ளார்.

இந்த ஐடியா நன்றாக இருக்கிறதே என அதனை பின்பற்ற தொடங்கி கல்லா கட்டி வருகின்றனர். ஆண், பெண் இருவருக்குமான மேட்சிங் ஜோடி மாஸ்குகளும் கிடைக்கின்றன. இந்த மாஸ்குகள் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x