டிஜிட்டல் சேவையை நிறுத்துங்கள் : ஹெச்.டி.எப்.சி வங்கிக்கு ரிசர்வு வங்கி திடீர் உத்தரவு?

குறிப்பிட்ட டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகள் மற்றும் புதிய கிரெடிட் கார்டுகள் வழங்குதல் ஆகியவற்றை நிறுத்தி வைக்க ஹெச்.டி.எப்.சி வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவைகள் நவம்பர் 21 மாலை முதல் நவம்பர் 22 காலை வரை சுமார் 12 மணிநேரம் முழுமையாக முடங்கியது. இதனால் ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதை யாரும் மறந்திருக்க முடியாது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஹெச்டிஎப்சி வங்கியின் டிஜிட்டல் சேவை தடைப்பட்டதற்கான காரணத்தைக் கேட்ட நிலையில், தற்போது ஹெச்டிஎப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டுகளைக் கொடுக்கத் தற்காலிக தடையை வித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் டிஜிட்டல் 2.0 திட்டத்தில் இருக்கும் புதிய டிஜிட்டல் திட்டங்களை அறிமுகம் செய்வதை நிறுத்தவும், ஐடி சேவைகள் மூலம் வர்த்தகம் ஈட்டும் இதர முயற்சிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து புதிய டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகள், புதிய கிரெடிட் கார்டுகள் வழங்குதல் ஆகியவற்றை நிறுத்தி வைக்குமாறு தங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாக ஹெச்.டி.எப்.சி. வங்கி தெரிவித்துள்ளது. கோளாறுகள் சரி செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கியின் சம்மதம் பெற்று, தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள வங்கி நடவடிக்கைகள் மீண்டும் துவக்கப்படும் என ஹெச்.டி.எப்.சி வங்கி தெரிவித்துள்ளது. அதே நேரம் ரிசர்வ் வங்கியின் உத்தரவால் புழக்கத்தில் உள்ள கிரெடிட் கார்டுகள் மற்றும் இதர டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x