உத்தரபிரதேசத்தில் தொடரும் கொடூரம்… தூங்கி கொண்டு இருந்த 3 சிறுமிகள் மீது ஆசிட் வீசி தாக்குதல்!!!

உத்தரபிரதேசத்தில் தூங்கி கொண்டு இருந்த 3 தலித் சிறுமிகள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கோண்டா பராஸ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாஸ்கா கிராமத்தில் கஜல் (17), மஹிமா (12), மற்றும் சோனம் (8) ஆகிய மூவரும் வீட்டின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஆசிட் வீசி சென்றுள்ளனர்.

மூத்த சகோதரிக்கு முகம் மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது, மேலும் இரண்டு சகோதரிகளுக்கு கைகளில் சிறு காயங்கள் உள்ளன. அவர்கள் மூவரும் கோண்டா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடத்தியவர் மற்றும் குற்றத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை  இன்னும் கண்டறியப்படவில்லை.மூன்று சகோதரிகளும் தோபி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தாழ்த்தபட்ட சாதி பிரிவின் கீழ் வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கோண்டா போலீசார்  இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x