பெண்களுக்கான மன அழுத்தத்தைக் குறைக்க எளிய டிப்ஸ்..

இன்றைய காலக்கட்டத்தில் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்கமுடியாது. இந்த மன அழுத்தம் அதிகமாக அதிகமாக மன உளைச்சல், பதற்றம் என உருவாகி பல்வேறு நோய்களுக்கு இவையே அடித்தளமாக அமைகிறது.

இப்படி பெண்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்தைக் குறைக்க சில எளிய வழிகளைக் காணலாம்.

காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

குறிப்பாக வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

எந்த செயலாக இருந்தாலும் முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்?? என்பது போன்றவை.

தவறாய் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள். மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டும்.

உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

இப்படி உங்களது அன்றாடச் செயல்களைத் திட்டமிடுதல் மூலம் பெண்களுக்கான மன அழுத்தத்தைக் குறைக்கலாம். இதுதவிர தினமும் காலையில் யோகா அல்லது உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்வதன் மூலம் மன அழுத்தம் குறையும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x