இனி இதை செய்யாவிட்டால் உங்கள் வாட்ஸப் கணக்கு நீக்கப்படும்?

வாட்ஸ்அப் பயனர்கள் புதிய சேவை விதிமுறைகளை ஏற்காவிட்டால் அவர்களின் வாட்ஸ்அப் அக்கௌன்ட் அணுகலை இழக்க நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது

தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவருகிறது. வாட்ஸ் அப்பில் பல்வேறு வசதிகளை அப்டேட் செய்து வருகிறது. இந்நிலையில் அதன் சேவை விதிமுறைகளை வரும் 2021ம் ஆண்டில் அப்டேட் செய்வதாகக் கூறியுள்ளது. அதன்படி, வாட்ஸ்அப், இந்தாண்டு ஜனவரி முதல் ஒரு புதிய நிபந்தனையை கொண்டுவரவுள்ளது. அது, வாட்ஸ்அப்பின் Terms and Privacy Policy Updates -ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதனுடன் உடன்பாடு இல்லையெனில், உங்களது வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என வாட்ஸ்அப் நிர்வாகம் கூறியது. இது பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக WABetaInfo வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “பயனர்கள் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்படம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பயனர்களின் சாட்களை சேமிக்கவும், ஃபேஸ்புக்-ல் வழங்கும் சேவைகளை வணிகங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளது.

நீங்கள் வாட்ஸ்அப் தொடர்ந்து உபயோகிக்க வேண்டுமானால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் புதிய விதிமுறைகளுக்கு must agree என்பதை கிளிக்செய்ய வேண்டும். மேலும், இந்த புதிய நிபந்தனைகள், பிப்ரவரி 8 2021 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x