“பேருந்துகளில் பழைய பயண அட்டையையே மாணவர்கள் பயன்படுத்தலாம்” – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழக மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்ய பழைய பேருந்து பயண அட்டையையே பயன்படுத்தலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதையடுத்து இன்று முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
இந்நிலையில், நிகழ்வாண்டிற்கான பேருந்து பயண அட்டை மாணவர்களுக்கு வழங்காததால் பேருந்தில் பயணம் செய்வதில் சிறிது குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில்,கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் புதிய பயண அட்டை வரும் வரை கடந்தண்டிற்கு வழங்கப்பட்ட பேருந்து பயண அட்டையையே பயன்படுத்தி பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.