எட்டு வழிச் சாலை தடை தொடரும்- விவசாயிகள் மகிழ்ச்சி..

சேலம் எட்டு வழிச் சாலை திட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் எட்டு வழிச் சாலைக்காக நிலம் கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதில் தற்போது உச்சநீதிமன்றம் சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது. இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என தற்போது தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இந்த உத்தரவில் இதுவரை 8 வழிச் சாலைத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களைத் திருப்பித் தரவேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.