பொழுது போக்கிற்காக அதிக செலவிட தயாராக உள்ளதாக இந்தியர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து கூறப்படுவதாவது: வேக்பீல்டு ரிசர்ச் நிறுவனம் இந்தியாவில் புதுடில்லி, மும்பை, சென்னை கோல்கட்டா, ஐதராபாத், மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் கடந்த அக், 1 ம் தேதி முதல் 16 ம் தேதி வரையில் ஆய்வை மேற்கொண்டது.
அதில் பெரும்பாலானோர் பொழுதுபோக்கு உபகரணங்களை மேம்படுத்துவதற்காக அதிகமாக செலவிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
66 சதவீதம் பேர் கொரோனா தொற்று கால விடுமுறையை ஓய்வு எடுப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். 95 சதவீதம் பேர் தாங்கள் இதற்கு முன்பு பார்க்காத புதிய உள்ளடக்கங்களுக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு துவக்கத்தை ஒப்பிடும் போது மாதாந்திர செலவினங்களில் சராசரியாக 48 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் ஏற்கனவே தாங்கள் ஸ்ட்ரிமிங் சேவைகளை மேம்படுத்த முதலீடு செய்துள்ளதாக பெரும்பாலானோர் தெரிவித்து உள்ளனர்.
