“மக்களே!! தமிழக அரசு மக்களுக்கு எதிரான அரசு” – பா.ரஞ்சித் டிவிட்

தமிழக அரசு மக்களுக்கு எதிரான அரசு என இயக்குனர் பா.ரஞ்சித் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியவாணி முத்து நகரில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தும் கலந்துகொண்டார். இந்நிலையில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த ரஞ்சித், அந்த பகுதியிலிருந்து மக்களை உடனே வெளியேற்றக் கூடாது. உரிய அவகாசம் தரப்பட வேண்டும்  எனகோரினார். இந்நிலையில் டிவிட்டரில் பா.ரஞ்சித் கூறியதாவது:

சத்தியவாணி முத்து நகர் குடிசை வாழ் மக்களின் இடப்பெயர்வு குறித்து நாம் வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக சொல்லிவிட்டு, மறு கணமே மக்களை அப்புறப்படுத்த ஆணையிட்டுள்ளார் துணை முதல்வர் அவர்கள். விழித்துக்  கொள்ளுங்கள், சென்னை வாழ் குடிசைப்பகுதி மக்களே இந்த அரசு நமக்கு எதிரான அரசு. 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x