முதன்முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர்

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவிய இத்தனை காலத்திலும், அமெரிக்க அதிபர் டிரம்ப், மாஸ்க் அணிவதை தவிர்த்து வந்தார். கொரோனா பெரிய நோய் கிடையாது, அதைப்பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை என்பதே அவரது நிலைப்பாடு.
இந்நிலையில், ராணுவ மருத்துவ நிலையத்தில் காயமடைந்த வீரர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களைச் சந்திக்க டொனால்ட் டிரம்ப் சென்றார். அப்போது டிரம்ப் மாஸ்க் அணிந்து இருந்தார். கடந்த டிசம்பரில் கொரோனா பிரச்னை துவங்கியதிலிருந்து, முதன்முறையாக தற்போதுதான், டிரம்ப் மாஸ்க் அணிந்திருக்கிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், “நான் மாஸ்க் அணிவதற்கு எதிரானவன் அல்ல. ஆனால், அது எப்போது தேவையோ அப்போதுதான் அணிய வேண்டும்.” என்று கூறினார். டிரம்ப்பை பின்பற்றி, அவரது ஆதரவாளர்களும், மாஸ்க் அணியாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்ககது.