சென்னை ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் 7516 கோடி முதலீடு!

ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் ஃபாக்சான் நிறுவனம் சென்னையில் முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
வர்த்தக போர் காரணமாக சீனாவில் இருந்து சில அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறும் யோசனையில் உள்ளன. ஆப்பிள் நிறுவனமும் கொஞ்சம் கொஞ்சமாக, சீனாவில் இருந்து, தனது ஆப்பிள் போன் தயாரிப்பை வெளியே கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதனால், ஆப்பிள் நிறுவனத்தின் உதிரி பாகங்களை, சீனாவை மையமாக வைத்து தயாரிக்கும் தைவானின் ஃபாக்ஸ்கான் நிறுவனம், அதை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது கிளை தொழிற்சாலைக்கு மாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் 7516 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலமாக 6000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.