புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை..! முதல்வர் அதிரடி

கர்நாடக மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகளை திறப்பது மற்றும் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். 
அதில், தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்தேக் காணப்பட்டாலும், ஜனவரி தொடக்கத்தில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 

அதனால், டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. உணவகம், கேளிக்கை விடுதிகள், விருந்து நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரசின் இந்த உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x