குளிர்காலத்தில் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?

இயற்கை நமக்கு அளித்த கொடை பழங்கள். அதோடு நாவுக்கு ருசியை தரும் பழங்களில், நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால், அன்றாடம் பழங்களை சேர்த்து கொண்டால் நல்லது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள். அதிலும் குறிப்பாக அந்தந்த சீசன்களில் கிடைக்கக்கூடிய பழங்களுக்கு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் இந்த சீசனில் கிடைக்கக்கூடிய ஒரு பழம்தான் ஆரஞ்சு. 

ஆரஞ்சு பழம் என்றதும் அது குளிர்ச்சியை தருவதால் சளிபிடிக்குமோ என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வரலாம். ஆனால், ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி உள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குளிர்காலம் நம் உடலை பல்வேறு நோய்களால் பாதிக்கச் செய்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்வது பருவகால நோய்களைத் தடுக்க உதவும். அதோடு முக்கியமாக குளிர்காலத்தில் அவசியம் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். ஏனெனில் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சரும ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகும். அவற்றை சீராக பராமரிக்க ஆரஞ்சு பழம் உதவும். குளிர்காலத்தில் சளி பிரச்சினை அதிகமாக இருக்கும். ஆரஞ்சு பழம் சளி தொல்லையில் இருந்து தற்காத்து கொள்ளவும் உதவும்.

பழங்களிலேயே மிகக் குறைவான கலோரி கொண்ட பழம். இதனால் உடல் எடையைக் கூட்டாது. கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக் கொள்ளவும். அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் ஆரஞ்சு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. ஆரஞ்சில் இருக்கக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது. அதுமட்டுமில்லாமல் இரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றிவிடும். இதன் மூலமாக கொலஸ்ட்ரால் அளவு சீராக இருக்கும்ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும். கொலஸ்ட்ராலை குறைக்கிறது மட்டுமல்லாமல் இதயம் சீராக இயங்குவதற்கு உதவுகிறது. 

தொடர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த கமலா ஆரஞ்சு சாப்பிட்டு வர இந்த கமலா ஆரஞ்சில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து குடலின் இயக்கத்தை சீராக இயக்கி மலம் எளிதில் வெளியேறுவதற்கு உதவியாய் இருக்கிறது. எனவே அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் கமலா ஆரஞ்சு சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமாக உதவும். 

ஆரஞ்சு குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். மேலும் டைப் 2 வகை சர்க்கரை நோயாளிகள் அவசியம் தவிர்க்ககூடாத பழமாகும்.ஆரஞ்சு பழத்தை ஜூஸாக பருகுவதன் மூலம் சிறுநீர கல் படிவதை கட்டுப்படுத்தலாம். சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஆரஞ்சு ஜூஸ் பருகி வரலாம். ஆரஞ்சு பழத்தை ஜூஸாக பருக விரும்புபவர்கள் தோலையும் சேர்த்து ஜூஸாக்க வேண்டும். அதில்தான் அதிக நார்ச்சத்து இருக்கிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x