உதயநிதி வாகனத்தை வழிமறித்த தமாகாவினர்!… பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு

அரியலூரில் திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்ற வாகனத்தை தமாகாவினர் முற்றுகையிட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (டிச.24) ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். அதன்படி, இன்று திருமானூர் பஸ் நிலையம் அருகே ஜி.கே.மூப்பனாரின் நாடாளுமன்ற நிதியில் கட்டப்பட்டுள்ள அரங்க மேடையில் உதயநிதி பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே, அந்த அரங்க மேடையைச் சீரமைப்பு பணியின்போது, அரங்க மேடையில் ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த ஜி.கே.மூப்பனார் பெயர் அழிந்துவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், நேற்று (டிச.24) உதயநிதியின் பிரச்சார வாகனத்தை முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.