“அல்வா கதை சொல்ல வரும் அமித் ஷா”; காங்கிரஸ் எம்.பி. விமர்சனம்

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தமிழகம் வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் அதுகுறித்து விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தமிழகம் வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் அதுகுறித்து விமர்சனம் செய்துள்ளார். பா.ஜனதா கட்சியின் முக்கியத் தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா வருகிற 21-ந்தேதி தமிழகம் வருகிறார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் எல். முருகன் நேற்று தெரிவித்தார்.
மேலும், அமித் ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ‘‘அல்வா விற்பதைப் போன்ற பெரும் கதை ஒன்றை சொல்ல வருகிறார் அமித்ஷா. இதற்கு முன் பலமுறை தமிழகம் வந்த அமித் ஷா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’’ என்றார்.