4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை..

கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடவடிக்கை அசாம், ஆந்திரா, குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கை, அசாம், ஆந்திரா, குஜராத், பஞ்சாப் மாநிலங்களிலும் தலா 2 மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது டிச.,28 மற்றும் 29 ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான குளிர்பதன சேமிப்பு வசதி, போக்குவரத்து ஏற்பாடுகள், சரியான சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நிர்வகித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
நோய் பரவலை தடுக்கவும், தடுப்பூசி போடக்கூடிய இடங்களில் தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றை மையமாக வைத்து ஒத்திகை நடத்தப்பட உள்ளது. மாநில மற்றும் மத்திய சுகாதார அமைச்சகங்களடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய கருத்துகளை தயாரிப்பது குறித்தும், ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த ஒத்திகை நடத்தப்பட உள்ளது.