கொரோனா டெஸ்ட் எடுப்பதிலும் கமிஷன் – சாத்துார் ராமச்சந்திரன் குற்றச்சாட்டு

கொரோனா டெஸ்ட் எடுப்பதிலும் அதிமுக அரசு ஊழல் செய்து வருவதாக தி.மு.க., மாவட்ட செயலாளர் சாத்துார் ராமச்சந்திரன் பேசினார்.

அருப்புக்கோட்டை தி.மு.க., சார்பாக நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த முறை நீங்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த அ.தி.மு.க., கட்சியின் அமைச்சர்கள் அளவே இல்லாமல் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்ட கட்சியாக உள்ளது. 

கொரோனா டெஸ்ட் எடுப்பதில் கூட கமிஷன் பார்க்கின்றனர். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மாஸ்க்குகளில் கமிஷன். உங்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியில் கூட கமிஷன் பார்க்கின்றனர். நல்ல அரிசியை விற்று விடுகின்றனர். மோசமான அரிசியை பாலீஸ் செய்து வழங்குகின்றனர். தி.மு.க., வை வெற்றி பெற வையுங்கள். நல்லது நடக்கும். என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x