கூட்டணி கட்சிக்கே ஆப்பு வைத்த பா.ஜ.க.,

ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அக்கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்துவிட்டு, அக்கட்சி இருக்கும் இடத்தை அடைவது பா.ஜ.க.,வின் அஜெண்டா என்ற பேச்சு, பீகார் தேர்தல் முடிவுகளின் போது எதிர்க்கட்சிகளால் பேசப்பட்டது.

ஏனென்றால் அங்கு ஆளும் கட்சியாக செல்வாக்குடன் இருந்தது ஐக்கிய ஜனதா தளம். அக்கட்சித் தலைவர் நிதிஷ், மோடி பிரதமராவதற்கு முன்பு வரை பா.ஜ.க.,வுடன் கூட்டணியில் இருந்தார். மோடியை முன்னிறுத்தினால் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் விழாது என கூட்டணியை முறித்துக் கொண்டு, பரம எதிர்க்கட்சியான லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமுடன் கூட்டு வைத்தார்.

சில ஆண்டுகளில் நிதிஷ் மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீது ஊழல் புகார் கூறினார். கூட்டணியை முறித்துக்கொண்டு பா.ஜ.க.,விடம் ஐக்கியமானார். சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் லாலுவின் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. இரண்டாவது கட்சியாக பா.ஜ.க., வந்துவிட்டது. நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 

இதற்கு முக்கிய காரணம் பா.ஜ.க., உடன் மத்தியில் கூட்டணியில் இருந்த சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஆகும். இக்கட்சி மாநிலத்தில் தனித்து போட்டியிட்டது. நிதிஷை கடுமையாக சாடி பிரசாரம் செய்தார். பல தொகுதிகளில் வாக்குகள் பிரிந்தன. இதெல்லாம் பழைய கதை. 

இப்போதைய செய்தி என்னவென்றால், அருணாச்சல் பிரதேசத்தில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 7 எம்எல்ஏக்கள் இருந்தனர். அவர்களில் 6 பேரை மொத்தமாக தங்கள் கட்சிக்கு இழுத்துள்ளது பா.ஜ.க., 

தமிழகத்தில் ஜெயலலிதா இருந்தவரை பா.ஜ.கவை ஒதுக்கியே வைத்திருந்தார். மோடி அலை வீசுவதாக கூறப்பட்ட காலத்தில் கூட தமிழகத்தில் ஜெயலலிதா அலை வீசியது. 

ஆனால் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க., அந்த கூட்டணிக்கு தாங்கள் தான் தலைமை என்பது போல பேசி வருகிறது. இதனை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கண்டும் ஒன்னும் செய்ய முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x