ரயில்வேஸ்ல இருந்து பேசுறோம்…கிளம்பியுள்ள புது மோசடி கும்பல்

இப்படி பேசி நம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை சுருட்ட காத்திருக்கிறது ஒரு புதிய கும்பல். ரயில் டிக்கெட் ரத்து செய்ததற்கான கட்டணத்தை திருப்பி வங்கி கணக்கில் செலுத்த உள்ளோம். வங்கி தகவல்களை தாருங்கள் என கேட்டு மோசடி செய்கின்றனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது. பயணிகளின் வங்கி விவரங்களை ரயில்வே நிர்வாகம் அலைபேசி வாயிலாக ஒரு போதும் கேட்பதில்லை.இருப்பினும் சில நாட்களாக மோசடி கும்பலை சேர்ந்த சிலர் அலைபேசி வாயிலாக, ரத்து செய்த டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வங்கி விவரங்களை கேட்பதாக புகார்கள் வந்துள்ளன. பயணிகள் அலைபேசி வாயிலாக வங்கி விவரங்கள், ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகளின் ரகசிய எண்ணை கேட்டால் தெரிவிக்க வேண்டாம்.

பயணம் ரத்தாகும் போது பயணிகளின் வங்கி கணக்கில் டிக்கெட் கட்டணம் தானாகவே வரவு வைக்கப்படும். ஸ்டேஷனில் முன்பதிவு செய்யும் டிக்கெட் கட்டணம், குறிப்பிட்ட காலத்திற்குள் கவுண்டரில் திரும்ப தரப்படும். யாராவது வங்கி விவரங்களை கேட்டால் இலவச எண் 138 ல் புகார் செய்யலாம். இவ்வாறு கூறினர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x