₹2500 வாங்காமல் விட்டால் திரும்ப கிடைக்குமா? அரசு விளக்கம்

₹2500 வாங்காமல் விட்டால் திரும்ப கிடைக்குமா? அரசு விளக்கம்..
ஜன., 4 முதல் 12 வரை ரொக்கம் ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு ரேஷன்கடைகளில் வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு ஜன., 13 வழங்கப்படும்.
ரேஷன்கார்டுதாரர்கள் எந்த சிரமுமின்றி பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம். கொரோனா தொற்றால் பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் விற்பனையாளர்கள் மூலம் வீடுகளில் வழங்கப்படும்.
டோக்கனில் குறிப்பிடும் நாளில் மட்டுமே கடைகளுக்கு செல்ல வேண்டும். அந்த நாளில் பெறாமல் விடுபட்டோருக்கு ஜன., 13 ல் வழங்கப்படும். கட்டாயம் முககவசம் அணிந்து ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்றி பரிசை பெற வேண்டும். பொங்கல் பரிசுதொகுப்பு, ரொக்கம் விநியோகம் குறித்து புகார்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலைபேசியில் தெரிவிக்கலாம், என கூறியுள்ளனர்.