8 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை!! வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை..

சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் தனியார் ஆலையில் வேலை செய்யும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரபூல் மொண்டால் என்ற இளைஞரும் வசித்து வந்தார்.

இந்நிலையில் ரபூல் மொண்டால் அப்பெண்ணின் மகளான 8 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரபூல் மொண்டாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கினை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி மாலதி, ரபூல் மொண்டாலிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டணையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x