கடலில் மிதந்து வந்த கார்! வைரலான வீடியோ..

கடற்கரையில் காரை நிறுத்தியதால் கடலுக்கு நடுவே அடித்துச்செல்லப்பட்ட கார் 4 மணி நேரம் போராடி மீட்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வாசை கடற்கரையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நண்பர்களுடன் சுற்றுலா வந்த ஒருவர், காலம்ப் கடற்கரையில் காரை ஓட்டி வந்திருக்கிறார். அப்போது கடற்கரை மணலில் கார் சிக்கிக்கொண்டது. இதனால் காரை அங்கிருந்து மீட்க முடியாததால் அங்கயே நிறுத்துவிட்டு சென்றுவிட்டனர். மறுநாள் காலை நேரத்தில் வந்து பார்த்தபோது நிறுத்திய இடத்தில் காணவில்லை. இதனால் அதிர்ந்துபோன நண்பர்கள் ஆளுக்கொரு பக்கம் தேடிப்பார்க்க இறுதியில் அலைகளால் கடலுக்குள் கார் இழுத்துச்செல்லப்பட்டது தெரியவந்தது. 

சுமார் 500 மீட்டர் தொலைவில் கடலில் மிதந்துகொண்டிருந்த காரை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து வாகை நகர் காவல் நிலையம் மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மீட்பு படையினர் டிரக்டரின் ஒரு முனையில் கயிறை கட்டி மற்றொரு முனையை காரில் கட்டி கரைக்கு இழுத்துவந்தனர். சுமார் 4 மணி நேரம் போராடி காரை மீட்டனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x