செல்போனால் தாக்கிய கணவன்.. பார்வை இழந்த மனைவி..?

குடும்ப தகராறில் செல்போனால் தாக்கியதில் மனைவியின் கண் பார்வை பறிபோனது. இது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை விருகம்பாக்கம், தாங்கல் உள்வாயல் தெருவைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 30). இவருடைய மனைவி சித்ரா (29). இவர்கள் இருவரும் 2016-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

லோகேஸ்வரன் வரதட்சணை கேட்டும், மது போதையிலும் மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

லோகேஸ்வரனுக்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த மாதம் 25-ந்தேதி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லோகேஸ்வரன், கையில் இருந்த செல்போனை மனைவி முகத்தில் வீசினார். இதில் செல்போன் அவரது இடது கண்ணில் பட்டதால் படுகாயம் அடைந்த சித்ராவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் சித்ராவின் இடது கண் பார்வை பறிபோனது தெரிந்தது.

இதுபற்றி வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x