வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போராட்டம்..

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ப்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டம் நடத்துகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங், முன்னாள் துணை முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் தொடர்ந்து 38-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே நடைபெற்ற 6 கட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x