தவறாக நடக்க முயன்ற இளைஞரை கொலை செய்த இளம்பெண்!!

பொன்னேரி அருகே தவறாக நடக்க முயன்ற இளைஞரை கொலை செய்து விட்டு இளம்பெண் போலீசில் சரணடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் கெளதமி இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார். அப்போது அவரது உறவினரான அஜித்குமார் (25)அவரை பின் தொடர்ந்து சென்று கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சித்தார். உடனே கத்தியை பிடுங்கிய கௌதமி அஜீத்குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கௌதமி சோழவரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்து நடந்தவற்றை கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அஜித்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உறவுக்காரப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபரை இளம் பெண் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x