கொரோனாவை அடுத்து மிரட்ட வரும் ‘எக்ஸ்’ நோய் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உலக நாடுகள் மீண்டு வரத் தொடங்கி இருக்கும் நிலையில், ‘எக்ஸ் நோய்’ என்ற அதிபயங்கரமான புதிய நோய் விரைவில் மனித குலத்தை தாக்கக் கூடும்,’ என மருத்துவ விஞ்ஞானி எச்சரித்துள்ளார். 

பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் மருத்துவ விஞ்ஞானி ஜீன் ஜாக்குவாஸ் டம்பாம். இவர், கடந்த 1976ம் ஆண்டு எபோலா வைரசை கண்டறிந்த விஞ்ஞானி பீட்டர் பயட்டுக்கு உதவியாக இருந்தவர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘எக்ஸ் நோய்’ என்ற பயங்கரமான புதிய நோய் அச்சுறுத்தல் மனித குலத்திற்கு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

கொங்கோவை சேர்ந்த பெண் ஒருவருக்கு எபோலா நோய் தொற்று உள்ளதா?என பரிசோதனை செய்யப்பட்டபோது எக்ஸ் வைரஸ் (Disease X) நோயினால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இது 
கொரோனா மற்றும் எபோலா வைரஸ்களை விட ஆபத்தான வகையாகும். கடந்த காலங்களில் ரேபிஸ் , எச்.ஐ.வி., லைம் நோய் உள்ளிட்ட தொற்றுக்கள் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவின. உருவாகி, பின்னர் அது அபாயகரமான நோயாக மாறியது. தற்போது, ஆப்பிரிக்காவின் காடுகளில் இருந்து எக்ஸ் நோய் என்ற புதிய தொற்று பரவத் தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் விரைவில் உலக நாடுகளுக்கு பரவும் வாய்ப்புள்ளது. எனவே, இனிவரும் நாட்களில் பல வீரியம் மிகுந்த புதிய வைரஸ்கள் தோன்றக் கூடும். இவை மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். புதிய நோய் தொற்றுக்கள் வெளிவரக்கூடிய சூழலில் நாம் தற்போது இருக்கிறோம் என மருத்துவ விஞ்ஞானி ஜீன் ஜாக்குவாஸ் டம்பாம் தெரிவித்துள்ளார்.

உலகளவில் இதுவரையில் கண்டறியப்படாத புதிய வைரஸ்கள் இனங்காணப்படுமிடத்து அவற்றுக்கு எக்ஸ் எனப் பெயரிடப்படுவது வழக்கம். தொடர்ந்து அது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபின்னர் புதிய பெயர் இடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய எக்ஸ் வைரஸ் ஒரு சர்வதேச தொற்று நோயாக மாறும் சாத்தியம் உள்ளது.முக்கியத்துவம் அளிக்கக் கூடிய நோய்களின் பட்டியலில் இந்த புதிய நோயும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாகும் என உலக சுகாதார நிறுவனத்தின் திகாரிகள் எச்சரித்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x